தந்தையை தாக்கிய மகன் உள்பட 4 பேர் மீது வழக்கு


தந்தையை தாக்கிய மகன் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 March 2021 3:27 AM IST (Updated: 25 March 2021 3:27 AM IST)
t-max-icont-min-icon

தந்தையை தாக்கிய மகன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள இடையார் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 51). இவருக்கு 2 மனைவிகள். அவர்களுக்கு, சுப்பிரமணியன் தனக்கு சொந்தமான இடத்தை சரி பாதியாக பிரித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் முதல் மனைவியின் மகன் மேகநாதனுக்கும், சுப்பிரமணியனுக்கும் இடப்பிரச்சினை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுப்பிரமணியனை தகாத வார்த்தையால் திட்டி மேகநாதன், அவரது மனைவி மலர்விழி, உறவினர் பழனிச்சாமி உள்பட 4 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

Next Story