மின்கம்பி உரசியதில் தீப்பிடித்து வைக்கோல் கட்டுகளுடன் சரக்கு ஆட்டோ எரிந்து நாசம்
மின்கம்பி உரசி தீப்பிடித்ததில் வைக்கோல் கட்டுகளுடன் சரக்கு ஆட்டோ எரிந்து நாசமானது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரில் கால்நடை மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள நெல் அறுவடை செய்யப்பட்ட வயலில் இருந்து வைக்கோல் கட்டுகளை சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்தனர். வயல்களுக்கு இடையே சென்றபோது, மின்கம்பிகள் வைக்கோல் கட்டுகள் மீது உரசி தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட டிரைவர், தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ மளமளவன பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து திருவையாறு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் கட்டுகள் மற்றும் சரக்கு வாகனம் எரிந்து நாசமானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story