கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய 4 சாயப்பட்டறைகள், 2 ஜவ்வரிசி தொழிற்சாலைகள் மூடப்பட்டன


கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய 4 சாயப்பட்டறைகள், 2 ஜவ்வரிசி தொழிற்சாலைகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 25 March 2021 4:05 AM IST (Updated: 25 March 2021 4:05 AM IST)
t-max-icont-min-icon

கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய 4 சாயப்பட்டறைகள், 2 ஜவ்வரிசி தொழிற்சாலைகள் மூடப்பட்டன

சேலம்:
கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய 4 சாயப்பட்டறைகள் மற்றும் 2 ஜவ்வரிசி தொழிற்சாலைகளை மூடி மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
தேதிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் மத்திய மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சேலம் திருமணிமுத்தாற்றுக்கு அருகில் அமைந்துள்ள சாயப்பட்டறைகள் மற்றும் ஜவ்வரிசி தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஆண்டிப்பட்டி, அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, குகை ஆகிய பகுதிகளில் வாரியத்தின் அனுமதி பெற்று செயல்பட்டு வந்த 4 சாயப்பட்டறைகளில் பூஜ்ஜிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை சரிவர இயக்காமல் கழிவுநீரை கால்வாயில் வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
மூடப்பட்டன
இதேபோல் கந்தம்பட்டி, அன்னதானப்பட்டி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 2 ஜவ்வரிசி தொழிற்சாலைகளிலும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியது தெரியவந்தது. இதையடுத்து 4 சாயப்பட்டறைகள் மற்றும் 2 ஜவ்வரிசி தொழிற்சாலைகளை மூடியும், மின் இணைப்புகளை துண்டித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியை பெற்று இயங்கி வரும் சாயப்பட்டறைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றினால் பட்டறைகளின் இசைவாணை ரத்து செய்யப்படும் எனவும், மேலும் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். மேலும் அவர் சாயப்பட்டறைகள் சுத்திகரிப்பு திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார்.

Next Story