சேதமடைந்த வழிகாட்டி பெயர் பலகை


சேதமடைந்த வழிகாட்டி பெயர் பலகை
x
தினத்தந்தி 25 March 2021 4:16 AM IST (Updated: 25 March 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் பகுதியில் சேதமடைந்த வழிகாட்டி பெயர் பலகையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மடத்துக்குளம்
மடத்துக்குளம் பகுதியில் உள்ள திண்டுக்கல்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.  மடத்துக்குளத்தை ஒட்டிய உடுமலை திருமூர்த்தி மலை, மூணாறு, மறையூர், கோடந்தூர், அமராவதி அணை, போன்ற சுற்றுலாத்தலம் அதிகம் உள்ள காரணத்தால், மடத்துக்குளத்தில் உள்ள திண்டுக்கல் -கோவை நெடுஞ்சாலை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் இந்த சாலையில் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் சென்று வருவது வழக்கம். 
இந்த பகுதியில் பொள்ளாச்சி, கோவை, உடுமலை, பழனி, கொடைக்கானல் போன்ற பல்வேறு ஊர்களுக்கான தூரங்களை கணக்கிட்டு, வழிகாட்டி பெயர் பலகை அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த சிலநாட்களாக இந்தப் பெயர் பலகை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியே செல்லும் வெளியூர் மற்றும் அனைத்து சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல், திணறி வருகின்றனர். எனவே சேதம் அடைந்துள்ள வழிகாட்டி பெயர் பலகையை, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைப்பு செய்து, அனைத்து வாகன ஓட்டிகளுக்கு, வழிகாட்டும் வகையில் பெயர் பலகையை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story