சிங்கிபுரத்தில் அத்தனூரம்மன், மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்
சிங்கிபுரத்தில் அத்தனூரம்மன், மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்தது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரத்தில் பழமையான அத்தனூரம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் தேரோட்டம் நடத்துவதற்கு வடிவமைக்கப்பட்டிருந்த பழமையான மரத்தேர்கள், பல ஆண்டுகளுக்கு முன்னரே பழுதடைந்து போனது. இதனையடுத்து, ஊர் பெரியதனக்காரர்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் மற்றும் கிராம மக்களின் முயற்சியால், இருகோவில்களுக்கும் தேரோட்டம் நடத்துவதற்கு தலா ரூ.12.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.25 லட்சம் செலவில் இரு புதிய மரத்தேர்கள், சிற்ப வேலைப்பாடுகளுடன், பழமை மாறாத கலைநயத்தோடு வடிவமைக்கப்பட்டது. இரு ஆண்டாக நடைபெற்று வந்த திருத்தேர் வடிவமைக்கும் பணி நிறைவடந்ததையொட்டி, இரு புதிய மரத்தேர்களும், நேற்று அடுத்தடுத்து வெள்ளோட்டம் நடைபெற்றது. அத்தனுாரம்மன் திருத்தேரை பெண்களே ஆர்வத்தோடு வடம்பிடித்து இழுத்துச் சென்று வெள்ளோட்டம் நடத்தினர். ஆண்கள் வழிவிட்டு பாதுகாப்பு அரணாக இருந்து வழி நடத்தினர். இவ்விழாவில் சிங்கிபுரம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.
Related Tags :
Next Story