சேலம் மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 33 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று 37 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20 பேர், வீரபாண்டியில் 4 பேர், கொங்கணாபுரத்தில் 3 பேர், நங்கவள்ளி, சங்ககிரி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், மேச்சேரி, சேலம் ஒன்றியம், பெத்தநாயக்கன்பாளையம், காரிப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 156 ஆக அதிகரித்து உள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 21 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 214 பேருக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story