சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை


சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை
x
தினத்தந்தி 25 March 2021 4:50 AM IST (Updated: 25 March 2021 4:50 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியல்
தமிழகத்தில் கடந்த ஜனவரி 20-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் இருந்தனர். அதில் ஆண்கள் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேரும், பெண்கள் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேரும் அடங்குவர்.
இந்நிலையில் 19-ந்தேதி வரை பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 391 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்தனர். அதனடிப்படையில் தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டது.
வாக்களிக்க தகுதியானவர்கள்
தற்போது 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் இந்த பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேரும், பெண்கள் 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,192 பேரும் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று அறிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கையின் விவரம் வருமாறு:-
கெங்கவல்லி - 1,15, 891 (ஆண்கள்), 1,23,065 (பெண்கள்), 4 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,38, 960;
ஆத்தூர் - 1,22,827 (ஆண்கள்), 1,31,796 (பெண்கள்), 12 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,54,635;
ஏற்காடு - 1,38,921 (ஆண்கள்), 1,44,979 (பெண்கள்), 16 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,83,916;
ஓமலூர் - 1,51,657 (ஆண்கள்), 1,44,233 (பெண்கள்), 4 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,95,894;
மேட்டூர் - 1,45,433 (ஆண்கள்), 1,41,181 (பெண்கள்), 6 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,86,620;
எடப்பாடி - 1,45,081 (ஆண்கள்), 1,40,101 (பெண்கள்), 23 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,85,205;
சங்ககிரி - 1,38,507 (ஆண்கள்), 1,35,708 (பெண்கள்), 19 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,74,234;
சேலம் (மேற்கு) - 1,49,228 (ஆண்கள்), 1,50,320 (பெண்கள்), 57 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,99,605;
சேலம் (வடக்கு) - 1,34,947 (ஆண்கள்), 1,41,053 (பெண்கள்), 22 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,76 022;
சேலம் (தெற்கு) - 1,27,210 (ஆண்கள்), 1,33,140 (பெண்கள்), 22 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,60,372;
வீரபாண்டி - 1,30,544 (ஆண்கள்), 1,29,443 (பெண்கள்), 19 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,60,006;
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story