தாளவாடி அருகே நடந்த வாகன சோதனையில் கிரானைட் உரிமையாளரிடம் ரூ.2½ லட்சம் பறிமுதல்
தாளவாடி அருகே நடந்த வாகன சோதனையில் கிரானைட் உரிமையாளரிடம் ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தாளவாடி
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன ே்சாதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தாளவாடி ஒங்கன்புரம் நால்ரோடு சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின் போது அந்த காரில் ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து காரில் வந்தவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ‘அவா் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லட்சுமண ராம் என்பதும், தாளவாடியை அடுத்த மெட்டல்வாடியில் கிரானைட் தொழிற்சாலை நடத்தி வரும் இவர் அங்குள்ள தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க பணம் எடுத்து வந்ததும்,’ தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு தாளவாடி தாசில்தார் உமா மகஸே்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story