நான் உங்கள் வீட்டு பிள்ளை; நெசவு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாப்பேன்; அ.ம.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் பேச்சு


நான் உங்கள் வீட்டு பிள்ளை; நெசவு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாப்பேன்; அ.ம.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் பேச்சு
x
தினத்தந்தி 25 March 2021 5:30 AM IST (Updated: 25 March 2021 2:41 PM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் ஒன்றிய பகுதியில் ஒரு லட்சத்திற்கு தொழிலாளர் நேரடியாகவும், மறைமுகமாகவும் நெசவு தொழில் செய்து வருகின்றனர்.

நெசவு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாப்பேன். நெசவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்திடவும் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ ஆகிய எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு கேட்டு கொண்டார். மேலும் எஸ்.திருவேங்கிடாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அய்யனாபுரம், சத்திரப்பட்டி ,சங்கரபாண்டியபுரம், சொக்கலிங்காபுரம், மில் கிருஷ்ணாபுரம், கம்மாப்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அ.ம.மு.கவின் வெற்றிச் சின்னமான குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அனைவரிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லும் இடங்களிலெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பளித்தனர். 

அப்பகுதியில் பேசிய எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ. இந்தப் பகுதி மக்கள் நலன்காக்க கொரோனா காலத்தில் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி தெளித்து மாத்திரைகள், சாத்தூர் தொகுதி முழுவதும் வழங்கியுள்ளேன். மேலும் பேவர் பிளாக் சாலை, அரசு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குடிநீர் குழாய் இணைப்பு வசதி செய்து நிரந்தர குடிநீர் பற்றாக்குறையை தீர்த்துள்ளேன். மேலும் நீங்கள் எனக்கு அ.ம.மு.க வின் வெற்றி சின்னமான குக்கர் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் உடனடியாக இந்த பகுதியில் உள்ள பள்ளிகளின் தரம் உயர்த்த பாடுபடுவேன்.

வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு அமைத்து, முக்கிய சாலை சந்திப்புகளில் உயர் மின்விளக்கு கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார். அவருடன் அ.ம.மு.க கட்சி நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேமுதிக நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story