ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆயுத பூஜையின் போது இலவச சீருடை; விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன் தகவல்
விருதுநகர் தொகுதியில் பொது மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறை வேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன்.
மேலும் கூறியதாவது விருது நகரை தலைமையிடமாகக் கொண்டு பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பெருந்தலைவர் காம ராஜர் பிறந்த ஊரான விருது நகர் கல்வியில் சிறந்து விளங்கு வதால் ஆண்டு தோறும் பொதுத் தேர்வில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கம் அளிக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் தனித் திறன் மேம்பாடு அடைய தேவையான பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் ஆண்டுதோறும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி படித்த இளைஞர்கள் தகுதிக்கேற்ப வேலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள படும் ஆயுத பூஜை தினத்தன்று ஆண்டு தோறும் ஆட்டோ ஓட்டுனர் களுக்கு இலவச சீருடை வழங்கப்படும் பட்டாசு தொழிலாளர்களுக்கு ரூபாய் 4 லட்சம் இலவச விபத்து காப்பீடு செய்யப்படும் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான உதவிகள் செய்யப் படும் தீப்பெட்டியை சந்தைப் படுத்த மத்திய தொழில் துறை உதவியுடன் குழூமம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருளான கருந்திரி தயாரிப்பு சில
கிராமங்களில் நடந்து வருகிறது. இத்தொழிலை முறைப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வச்சக்காரப்பட்டி அருகே ஜக்கம்மாள் கோவில் கட்டப்படும்.
விருதுநகர் நகராட்சியில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் செயல் படுத்தப்பட வேண்டிய திடக்கழிவு மேலாண்மை இயந்திரம் முடங்கி கிடக்கும் நிலையில் அதனை செயல் படுத்த நடவடிக்கை எடுக்கப் படும். விருதுநகர் பகுதியில் உள்ள குடிநீர் பகிர்மான குழாய்கள் நீண்டநாட்களுக்கு முன் பாதிக்கப்பட்டதால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலையில் குடிநீர் விநியோக புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே ரூபாய் 21கோடியில் தயாரிக்கப்பட்ட இதனைமறு ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை செய்து திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விருதுநகர் பகுதியில் தேவைப்படும் இடங்களில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அவ்வப்போது பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு உள்ள பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கு தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விருதுநகர் அருகே செங்குன்றாபுரத்தில் பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து அதிமுக மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன் பிரச்சாரம் செய்தார்.
Related Tags :
Next Story