அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்; அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வம் உறுதி


அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்; அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வம் உறுதி
x
தினத்தந்தி 25 March 2021 6:30 AM IST (Updated: 25 March 2021 6:25 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.

விவசாயம் சார்ந்த தொழில்கள்
திருவாரூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம்  தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். திருவாரூர் தொகுதிக்குட்பட்ட கொரடாச்சேரி, 
கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில்  பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். 


அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் சட்டசபை தொகுதி விவசாயிகள் நிறைந்த ஒரு பகுதியாகும். இப்பகுதியில் பிரதான தொழிலாக விவசாயமே இருந்து வருகிறது. நானும் ஒரு விவசாயி என்ற முறையில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை உணர்ந்துள்ளேன். அந்தவகையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் தொய்வின்றி பாதுகாக்கப்படும் வகையில் திருவாரூர் சட்டசபை தொகுதியில் விவசாயம் சார்ந்த தொழில்கள் ஏற்படுத்தப்படும்.
 
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எப்போதும் பாதுகாக்கப்படும்.  அதேபோல்  திருவாரூர் சட்டசபை தொகுதியிலும் பொதுமக்கள் அமைதியுடன் வாழ அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.  நான் சட்டசபை உறுப்பினர் ஆனால் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றுவேன். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அனைத்து வீடுகளுக்கும் வாஷிங்மெஷின் வழங்கப்படும். அதேபோல் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும். இந்தத் திட்டங்கள் எல்லாம் உங்களை வந்து சேரவும், நல்லாட்சி தொடர்ந்து நடந்திடவும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story