வியாபார பங்கு உரிமையை அபகரித்து மோசடி
வியாபார பங்கு உரிமையை அபகரித்து மோசடி
கோவை
பெண்ணை ஏமாற்றி கையெழுத்து பெற்று வியாபார பங்கு உரிமையை அபகரித்த தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கோல்டு கவரிங் வியாபாரம்
கோவை வடவள்ளியை சேர்ந்த தொழில் அதிபர் சந்திரமவுலி (வயது50). இவர் "தேஜஸ்வினி " என்ற பெயரில் கோல்டு கவரிங் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவரும், அவரது பங்குதாரரான பாலசுப்பிரமணியம் என்பவரும் சரிசமமாக பங்கு போட்டு இந்த தொழிலை செய்து வந்தனர்.
பாலசுப்பிரமணியம் கடந்த ஜனவரி மாதம் இறந்தார். இதனால் சந்திரமவுலி, இந்ததொழிலை கவனித்து வந்தார். இதற்கிடையே அவர் கோல்டு கவரிங் நகை தொழிலை முழுவதையும் கைப்பற்ற திட்டமிட்டார்.
தொழில் சம்பந்தமாக அனைத்து விவரங்களும் அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. எனவே அவரது செல்போனை கொடுத்தால் தான் தொழில் செய்ய முடியும் என்று, அவருடைய மனைவி லட்சுமியிடம், சந்திரமவுலி நைசாக பேசி செல்போனை வாங்கினார்.
அதன்பிறகு நிறுவனத்தை நடத்த வசதியாக ஆவணங்களில் கையெழுத்து போடுமாறு ஏமாற்றி லட்சுமியிடம் மோசடியாக கையெழுத்து பெற்றுள்ளார்.
தொழில் அதிபர் கைது
பின்னர் கோல்டு கவரிங் தொழிலில், சந்திரமவுலியின் மனைவி நாகலட்சுமியை பங்குதாரராக சேர்த்துக்கொண்டு, லட்சுமியின் கணவரின் பங்கை அபகரித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து லட்சுமி, கோவை நகர போலீஸ் கமிஷனர் சுமித்சரணிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்படி நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி,. சந்திரமவுலி மீது கூட்டு சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story