தேர்தல் பொது பார்வையாளர்ஆய்வு
தேர்தல் பொது பார்வையாளர்ஆய்வு
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி போது தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ஹிரிஷிகேஷ் நேற்று மேட்டுப்பாளையம் தொகுதிக்கு வந்தார்.
பின்னர் அவர்மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள ஜி.எம்.ஆர்.சி.பள்ளி ரோசரி பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குட்டையூர் நடுநிலைப்பள்ளி மத்தம்பாளையம் பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி சாய்தளம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன் தனி தாசில்தார் ரங்கராஜன் தேர்தல் துணை தாசில்தார் செல்வராஜ் ஆகியோர் சென்றிருந்தனர்.
இதுபோல் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்களின் முகவர்களுக்கான தேர்தல் செலவினம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் தேர்தல் செலவின பார்வையாளர் அமிதாப் ஷா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய செலவின விதிமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன் தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story