அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் உயர கடுமையாக உழைப்பேன்; திருவிடைமருதூர் அ.தி.மு.க. வேட்பாளர் யூனியன் எஸ்.வீரமணி பிரசாரம்
அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் உயர கடுமையாக உழைப்பேன் திருவிடைமருதூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் யூனியன் வீரமணி கூறினார்.
தனி தாலுகா
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பு தாக்கல், வேட்மனு பரிசீலனை முடிந்து வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் யூனியன் எஸ். வீரமணி திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலவிசலூர் கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் வேட்பாளர் யூனியன் வீரமணி பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து சென்று நேரில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர்கள் வைத்த ஒரு சில கோரிக்கைகளை உடனடியாக செய்து தருவதாக வேட்பாளர் வீரமணி உறுதியளித்தார்.
அப்போது வேட்பாளர் வீரமணி கூறியதாவது:-
நாச்சியார் கோவில் தனி தாலுகாவாக அறிவிக்க உள்ளதாக முதல்வர் கூறியுள்ளதை செயல்படுத்த நீங்கள் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் உயர பாடுபடுவேன்.
பொருளாதாரம்
என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தால் உங்கள் வீட்டில் ஒருவராக இருந்து உங்கள் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன். அரசின் நலத்திட்டங்களை முழுமையாக நாம் பெறுவதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனக்கு வாக்களித்தால் திருவிடைமருதூர் தொகுதியை பொருளாதார ரீதியாக உயர்த்தும் அனைத்து முயற்சிகளையும் செய்வேன். அ.தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறி உள்ள அனைத்து வாக்குறுதிகளையும் கண்டிப்பாக நிறைவேற்றும். பெண்களுக்கு மாதம் ரூ.1500, ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவசம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அரசு அறிவித்து உள்ளது.
குறைகளை தீர்ப்பேன்
திருவிடைமருதூர் சட்ட சபை தொகுதியில் உள்ள குறைகள் குறித்து மக்கள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம். விவசாயிகள் மற்றும் நெசவாளர்களின் குறைகளை தீர்க்க அனைத்து முயற்சிகளையும் செய்வேன். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் நல்லாட்சியை கொடுத்துள்ளார். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.மக்கள் நலத்திட்டங்கள் தொடர அ.தி.மு.க. கூட்டணி கட்சியை மக்கள் ஆதரித்து நல்லாட்சி தொடர வழிவகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வேட்பாளருடன் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செம்மங்குடி ஜி.முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story