துறையூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்திக்கு பெண் தையல் கலைஞர்கள் சங்கத்தினர் ஆதரவு


துறையூரில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் பெண் தையல் கலைஞர்கள் வேட்பாளர் இந்திராகாந்திக்கு ஆதரவுதெரிவித்தபோது
x
துறையூரில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் பெண் தையல் கலைஞர்கள் வேட்பாளர் இந்திராகாந்திக்கு ஆதரவுதெரிவித்தபோது
தினத்தந்தி 25 March 2021 9:45 AM IST (Updated: 25 March 2021 9:50 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் இந்திராகாந்தி போட்டியிடுகிறார்.

இவர் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அம்மாபட்டி, ஆதனூர், சொக்கநாதபுரம், க.பாளையம், கலிங்கமுடையான்பட்டி, கண்ணனூர், கீரம்பூர், கொல்லப்பட்டி, கோம்பை, கொட்டையூர், கோவிந்தாபுரம், குன்னூபட்டி, மதுராபுரி, மருவத்தூர், முத்தையம்பாளையம், நடுவலூர், நாகலாபுரம், நரசிங்கபுரம், பகளவாடி, பெருமாள்பாளையம், பொண்ணு சங்கம்பட்டி, செல்லிபாளையம், சேனப்ப நல்லூர், சிக்கதம்பூர், சிங்களாந்தபுரம் தூ.ரெங்கநாதபுரம், வி.ஏ.சமுத்திரம், வண்ணாடு, வரதராஜபுரம், வீரமச்சான் பட்டி, வேங்கடத்தானூா், வெங்கடேசபுரம் உள்பட அனைத்து ஊராட்சிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது, பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:- 
இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாடு தான் மின் மிகை மாநிலமாகவும், முதன்மை மாநிலமாகவும் விளங்குகிறது. இதற்கு முழு காரணம் ஒரு விவசாயி முதல்-அமைச்சராக பதவியேற்று ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை நன்கு அறிந்து, திட்டங்களை வகுத்தது தான். தமிழ்நாடு வெற்றி நடைபோடும் தமிழகமாக மாறியுள்ளது. நமது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மகளிருக்கான பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்கள். இந்த திட்டங்கள் அனைத்தும் தங்களிடம் கொண்டு வந்து சேர்க்க 2011-ல் பெரு வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி அடைய செய்தது போல் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை மீண்டும் உங்களுக்காக பணிசெய்ய வாய்ப்பளியுங்கள்.  இவ்வாறு 
அவர் கூறினார். பின்னர் துறையூரில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள பெண் தையல்காரர்கள் சங்கத்தினர் பெண்களின் முன்னேற்றத்திற்காக நீங்கள் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பெண்களின் உரிமைக்காக போராட வேண்டும். அவர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். பின்னர், எங்களின் முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்று ஆதரவு தெரிவித்தார்கள். 

அப்போது துறையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சேனை செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், திருச்சி மாவட்ட விவசாய அணி செயலாளர் பொன். காமராஜ், முன்னாள் ஒன்றிய தலைவர் மனோகரன், முன்னாள் அரசு வக்கீல் செந்தில் குமார், கட்சித்தொண்டர்கள், கிளைக்கழக நிர்வாகிகள் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டார்கள்.

Next Story