விளவங்கோடு தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன்; வேட்பாளர் சாமுவேல் ஜார்ஜ் பிரசாரம்


திருத்துவபுரம் பகுதியில் சாமுவேல் ஜார்ஜ் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.
x
திருத்துவபுரம் பகுதியில் சாமுவேல் ஜார்ஜ் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.
தினத்தந்தி 25 March 2021 11:45 AM IST (Updated: 25 March 2021 11:26 AM IST)
t-max-icont-min-icon

விளவங்கோடு தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கிரிக்கெட் மட்டை சின்னத்தில் வாக்குகளை தாருங்கள் என வேட்பாளர் சாமுவேல் ஜார்ஜ் பிரசாரம் செய்தார்.

‘கிரிக்கெட் மட்டை’ சின்னம்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு ‘கிரிக்கெட் மட்டை’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் தனது ஆதரவாளர்களுடன் அருமனை, கடையாலுமூடு, மஞ்சாலுமூடு, திருத்துவபுரம் போன்ற பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 24 மணி நேரமும் தங்கியிருந்து மக்களோடு மக்களாக நிற்பேன். நெய்யாறு இடதுகரை கால்வாயில் கேரள அரசு தண்ணீர் தர மறுத்தால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் இருந்து மோட்டார் மூலம்  கால்வாயில் தண்ணீரைப் பாய்ச்சி விவசாயம் செழிக்க நடவடிக்கை 
எடுக்கப்படும். 

அடிப்படை வசதிகள்
தொகுதியில் அடிப்படை வசதிகளை நிைறவேற்றுவேன். விளவங்கோடு தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்ற கிரிக்கெட் மட்டை சின்னத்தில் எனக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story