‘‘தியாகராயநகரை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே லட்சியம்’’ அ.ம.மு.க. வேட்பாளர் பரணீஸ்வரன் வாக்குறுதி


‘‘தியாகராயநகரை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே லட்சியம்’’ அ.ம.மு.க. வேட்பாளர் பரணீஸ்வரன் வாக்குறுதி
x
தினத்தந்தி 25 March 2021 6:32 PM IST (Updated: 26 March 2021 8:00 AM IST)
t-max-icont-min-icon

நல்ல மாற்றத்தை டி.டி.வி.தினகரன் ஏற்படுத்துவது நிச்சயம் ‘‘தியாகராயநகரை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே லட்சியம்’’ அ.ம.மு.க. வேட்பாளர் பரணீஸ்வரன் வாக்குறுதி.

சென்னை,

சென்னை தியாகராயநகரில் அ.ம.மு.க. கட்சி வேட்பாளராக ஆர்.பரணீஸ்வரன் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார். தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ‘பிரஷர் குக்கர்’ சின்னத்துக்கு வாக்கு கேட்டு தினமும் காலை, மாலை என தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வீதி வீதியாக செல்லும் அவருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். ஆரத்தி எடுத்தும், பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழித்தும், பூக்களைத் தூவியும் அவரை வரவேற்கிறார்கள். பல்வேறு தரப்பு மக்களையும் சென்று சந்தித்து அ.ம.மு.க.வின் செயல்பாடு, தேர்தல் அறிக்கையின் சாராம்சம், தொகுதியில் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து தெளிவாக விளக்கி ஆர்.பரணீஸ்வரன் பிரசாரம் செய்து வருகிறார். அவரிடம் மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, குடிநீர்-கழிவுநீர் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து பேசும்போது ‘‘தியாகராயநகரை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே லட்சியம். அ.ம.மு.க. ஆட்சியில் நிச்சயம் இவைகளுக்கு தீர்வு கிடைக்கும். மாற்றத்துக்கான ஒரே தீர்வு அ.ம.மு.க.தான். டி.டி.வி.தினகரன் அந்த நல்ல மாற்றத்தை முன்னெடுப்பார். மக்களின் தேவைகள் இருக்கும் இடத்தில் நிச்சயம் எங்கள் சேவைகள் இருக்கும். அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் வகையில் தான் எங்கள் தலைவர் டி.டி.வி.தினகரன் வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார் ’’, என்று கூறியும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.

அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையை முன்வைத்து தியாகராயநகரில் வேட்பாளர் ஆர்.பரணீஸ்வரன் முன்வைத்து வரும் வாக்குறுதிகள் வருமாறு:-

* தாலிக்கு தங்கம் திட்டம்.
* பெண்களில் கல்வி-வேலைவாய்ப்பு உயர்வு
* பள்ளி-கல்லூரிகளில் வை-பை வசதி
* மாதம் ஒருமுறை மின்கட்டணம்
* நீட் இல்லாத மருத்துவப்படிப்பு
* விவசாயிகள் நலனுக்கு அதிக சலுகைகள்-திட்டங்கள்
* சிறு-குறு தொழில்கள் மேம்பாட்டு திட்டங்கள்
* எந்த சமூகமும் பாதிக்காத வகையில் அனைவருக்கும் சமஉரிமை.

இவை உள்பட அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையை முன்வைத்து பல்வேறு வாக்குறுதிகளை கூறி தியாகராயநகரில் ஆர்.பரணீஸ்வரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இளமை துடிப்புக்கே உரிதான தனது பேச்சாற்றலாலும், தொலைநோக்கு திட்டங்கள் குறித்து வியக்கும் வகையில் விளக்கி கூறுவதிலும் பொது மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

Next Story