கொலை வழக்கில் கைதான 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை வழக்கில் கைதான 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 25 March 2021 1:57 PM GMT (Updated: 25 March 2021 1:57 PM GMT)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை வழக்கு
தூத்துக்குடி கதிர்வேல் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் மாரிமுத்து (வயது 36). இவரை, முன்விரோதம் காரணமாக புதியம்புத்தூர் நீராவிமேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துக்குமார் என்ற மதுரைமுத்து (32), தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த பச்சைபெருமாள் மகன் லட்சுமணன் என்ற மாக்கா லட்சுமணன் (35), தூத்துக்குடி மறவன்மடம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சக்திவேல் என்ற சக்தி (36) மற்றும் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த முருகன் மகன் இசக்கிராஜா என்ற ராஜா (32) ஆகியோர் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை செய்து உள்ளனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு 4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் பாளையங்கோட்டை ஜெயலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் முத்துக்குமார் என்ற மதுரைமுத்து (32), லட்சுமணன் என்ற மாக்கா லட்சுமணன், சக்திவேல் என்ற சக்தி மற்றும் இசக்கிராஜா என்ற ராஜா ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை இன்ஸ்பெக்டர் வேல்முருகன் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.

Next Story