திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி தொகுதிகளில் வேட்பாளர்கள் செலவின கணக்குகளை 3 கட்டமாக சமர்ப்பிக்க அவகாசம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தகவல்


திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி தொகுதிகளில் வேட்பாளர்கள் செலவின கணக்குகளை 3 கட்டமாக சமர்ப்பிக்க அவகாசம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தகவல்
x
தினத்தந்தி 25 March 2021 7:39 PM IST (Updated: 25 March 2021 7:39 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

திருவள்ளூர், 

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து வேட்பாளர்களின் செலவு கணக்கை உரிய பதிவேடுகள் உடன் மூன்று கட்டமாக சம்பந்தப்பட்ட உதவி செலவின மேற்பார்வையாளர்களின் குழுவுடன் ஆய்வு மேற்கொள்ள கீழ்கண்ட அட்டவணையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு.,

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் 26, 30, 4 ஆகிய 3 நாட்களும், பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் 25, 29, 3 ஆகிய நாட்களில் பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், திருத்தணி சட்டமன்ற தொகுதியில் 25, 30, 3 ஆகிய மூன்று நாட்களில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்கு 25, 30, 3 ஆகிய மூன்று நாட்களில திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், நேரிலோ அல்லது தங்களின் தேர்தல் முகவர் அல்லது தங்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலமாகவோ செலவினம் மேற்பார்வையாளர்கள் குழுவிடம் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Next Story