திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் பலியானார்


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் பலியானார்
x
தினத்தந்தி 25 March 2021 7:54 PM IST (Updated: 25 March 2021 7:54 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் பலியானார்

ஈரோடு மாவட்டம் பவானி சந்தைரோடு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். அவருடைய மகன் சபரிநாதன் (வயது 30). என்ஜினீயரான இவர், மதுரையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

 கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் அவர் பயன்படுத்திய மடிக்கணினியில் பழுது ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக, மதுரையில் தான் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே அஞ்சலி ரவுண்டானா மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. 

அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், பாலத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதிய சபரிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சபரிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-------

Next Story