கோரிக்கையை நிறைவேற்றக்கோரி 28-வது நாளாக சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளிடம் நடப்பாண்டு முதல் குறைக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை பெற வலியுறுத்தி மாணவர்கள் கடந்த 27 நாட்களாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 28-வது நாளாக நேற்று மாலை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு எங்களை காப்பாற்று என்ற பதாகைகளுடன் தரையில் அமர்ந்து நடப்பாண்டு முதல் குறைக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை பெற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதனால் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story