நிலக்கோட்டையில் மாரியம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா


நிலக்கோட்டையில் மாரியம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா
x
தினத்தந்தி 25 March 2021 8:48 PM IST (Updated: 25 March 2021 8:48 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டையில் பங்குனி மாத திருவிழாவையொட்டி பூப்பல்லக்கில் மாரியம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிலக்கோட்டை:
 இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா, கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் மாரியம்மன் அருள்பாலித்து வருகிறார். 
நேற்று முன்தினம் இரவு, பூப்பல்லக்கில் அமர்ந்து வீதி உலா வந்தார். கோவிலில் இருந்து தொடங்கிய வீதி உலா மெயின்பஜார், நால்ரோடு, பெரியகாளியம்மன் கோவில் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்களும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். பூப்பல்லக்கு வீதி உலாவை தொடர்ந்து மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
 அப்போது, முளைப்பாரிகளுடன் பெண்கள் ஊர்வலமாக சென்றனர். அம்மனும் பூஞ்சோலையை வந்தடைந்தார்.
இந்த விழாவில் எஸ்.தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ., நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் யாகப்பன், மு.வ.மாணிக்கம் அன்கோ உரிமையாளர் ஜெயச்சந்திரன், வர்த்தக சங்க தலைவர் பிரபாகரன், மு.வ.அமுல்ராஜ் அன்கோ உரிமையாளர் அசோகன், நகர செயலாளர் சேகர், நகர துணைச்செயலாளர் முத்து, நகர பொருளாளர் பூக்கடை சரவணன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணை தலைவர் மூர்த்தி, எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர் முனியப்பன், தி.மு.க நகர செயலாளர் கதிரேசன், தி.மு.க. நகர நிர்வாகிகள் ஜோசப், பால் ரத்தினராஜ், நிலக்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் கோகுல்நாத், வீலிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வீருசின்னுமுருகன், ஸ்ரீ கண்ணன் மோட்டார்ஸ் நவநீதகிருஷ்ணன், அ.தி.மு.க. முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை நூற்றாண்டு கண்ட இந்து நாடார் உறவின்முறை காரியதரிசிகள் சுசீந்திரன், பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு, கருமலைப்பாண்டியன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.



Next Story