கடலூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 28 பேருக்கு கொரோனா


கடலூர் மாவட்டத்தில்   ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 28 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 March 2021 8:50 PM IST (Updated: 25 March 2021 8:50 PM IST)
t-max-icont-min-icon

28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

28 பேருக்கு பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 423 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 28 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் சென்னையில் இருந்து புவனகிரி வந்த ஒருவர், குமராட்சியை சேர்ந்த ஒருவர், சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 8 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
இது தவிர கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த கடலூர் அருகே கே.என்.பேட்டையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 18 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்து 451 ஆக உயர்ந்தது.

பரிசோதனை

நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 18 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், நேற்று 10 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பாதித்த 113 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 21 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 158 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

Next Story