விஷம் குடித்து பெண் தற்கொலை
ஆண்டிப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை புதூர் கே.கே.காலனியை சேர்ந்தவர் கந்தவேல்.
இவருடைய மனைவி விஜயா (வயது 50). இவர் கடந்த சில நாட்களாக வயிற்றுவலி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினையால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதில் குணமாகாததால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி விஜயா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story