வேலூர்; வாக்குச்சாவடிகளுக்கு தேவையான கொரோனா தடுப்பு உபகரணங்கள் வருகை
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான கொரோனா தடுப்பு உபகரணங்கள் வந்துள்ளன.
வேலூர்
கொரோனா வைரஸ் பரவல் சூழலை கருத்தில் கொண்டு சட்டமன்ற தேர்தலை பாதுகாப்புடன் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர், சானிடைசர், முகக்கவசங்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்கள், வாக்காளர்களுக்கு கையுறை மற்றும் மருத்துவ கழிவுகளை சேகரிக்க குப்பைத்தொட்டிகள் போன்றவை பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த பொருட்கள் அனைத்தும் சென்னையில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வேலூர் கலெக்டர் அலுவலக பின்புறமுள்ள ஊராட்சித்துறை ஒருங்கிணைந்த கட்டிட வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அங்கு மருந்தாளுநர் சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர் தனசேகர் ஆகியோர் மேற்பார்வையில் ஊழியர்கள் மாவட்டத்திலுள்ள 1,783 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான உபகரணங்கள் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பொருட்கள் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அந்தந்த தாலுகா அலுவலங்களுக்கு அனுப்பப்பட்டு பின்னர் அங்கிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story