மாவட்ட செய்திகள்

திண்டுக்கல், நத்தம் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொதுபார்வையாளர் ஆய்வு + "||" + election observer inspected the tense polling booths in Dindigul and Natham constituencies

திண்டுக்கல், நத்தம் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொதுபார்வையாளர் ஆய்வு

திண்டுக்கல், நத்தம் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொதுபார்வையாளர் ஆய்வு
திண்டுக்கல், நத்தம் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொதுபார்வையாளர் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்:
சட்டமன்ற தேர்தலுக்காக திண்டுக்கல் தொகுதியில் 397 வாக்குச்சாவடிகளும், நத்தம் தொகுதியில் 402 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதில் திண்டுக்கல் தொகுதியில் 35 வாக்குச்சாவடிகளும், நத்தம் தொகுதியில் 12 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து பதற்றமான பகுதியில் துணை ராணுவத்தினரின் கொடிஅணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும் போலீஸ் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே திண்டுக்கல், நத்தம் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் பொது பார்வையாளர் பாபுசிங் ஜமோட் நேற்று திடீர் ஆய்வு செய்தார். இதில் எரமநாயக்கன்பட்டி, சமுத்திராபட்டி உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகள் மற்றும் அந்த பகுதிகளில் பறக்கும் படையினரின் செயல்பாடுகள், வாகன தணிக்கை பதிவேடுகளை ஆய்வு செய்தார். 
மேலும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி அறிவுறுத்தினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சுதந்திர தின விழா கொண்டாட்டம்
திண்டுக்கல், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
2. திண்டுக்கல், பழனி ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டதா? மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை
திண்டுக்கல், பழனி ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டதா? என்று மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை நடத்தினர்.