சூட்டிங்மட்டத்தில் சோலை மரக்கன்றுகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


சூட்டிங்மட்டத்தில் சோலை மரக்கன்றுகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 25 March 2021 10:15 PM IST (Updated: 25 March 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

சூட்டிங்மட்டத்தில் சோலை மரக்கன்றுகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஊட்டி

சூட்டிங்மட்டத்தில் சோலை மரக்கன்றுகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

சோலை மரக்கன்றுகள்

நீலகிரியில் மரங்களை வெட்ட அனுமதி கொடுக்கும் போது, அதற்கு பதிலாக சோலை மரக்கன்றுகளை நட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்ட வனத்துறை மூலம் ஊட்டி அருகே உள்ள சூட்டிங்மட்டம் சுற்றுலா தலம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சூழல் சுற்றுலா செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. இதனால் அங்கு பணிபுரிந்து வந்த சூழல் மேம்பாட்டு குழுவினர் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நுழைவாயில் அமைத்து மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டனர். 

அப்போது நீலகிரிக்கு ஏற்ற சோலை மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக வெளியிடங்களில் இருந்து சோலை நாற்றுகள் கொண்டு வரப்பட்டு சிறிய தொட்டிகளில் நடவு செய்யப்பட்டது.

 சூட்டிங்மட்டம் சுற்றுலா தலத்தில் சூழல் மேம்பாட்டு குழுவினர் மூலம் 8,000 சோலை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது நாவல், விக்கி, செண்பகம் உள்பட 11 வகைகளை சேர்ந்த சோலை மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க

நர்சரியில் இயற்கை உரம் போடப்பட்டு வளர்க்கப்படுவதால் 3 மாதத்தில் விற்பனைக்கு தயாராகி விடும். அதிகமான வனப்பகுதிகளை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு கட்டுவது, விவசாயம் செய்வது போன்றவற்றுக்காக மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கோரப்படுகிறது.

பெரும்பாலும் சீகை, கற்பூர மரங்களால் பயனில்லை. இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும்போது, அதற்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதுகாக்க சோலை மரக்கன்றுகளை நடவு செய்ய வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மரக்கன்றுகள் அதிகளவில் நடவு செய்து பராமரித்து வருகிறோம். 

சூட்டிங்மட்டத்தில் சோலை மரக்கன்றுகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.

Next Story