589 பேர் மீது வழக்குப்பதிவு


589 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 25 March 2021 10:39 PM IST (Updated: 25 March 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதிகளை மீறியதாக 589 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை தலைமையில் துணைகோட்டத்திற்கு உட்பட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச் சென்ற 36 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்சென்றதாக ஒருவர் மீதும், தலைக்கவசம் அணி யாமல் சென்ற 283 பேர் மீதும், தலைக்கவசம் அணியா மல் பின்னால் அமர்ந்து சென்ற 105 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாமல் சென்றதாக 18 மீதும், இதர பிரிவுகளின் கீழ் 146 பேர் மீதும் என மொத்தம் 589 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.89 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டு உள்ளது.

Next Story