விக்கிரவாண்டி அருகே ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.3¾ கோடி பறிமுதல் வருமானவரித்துறையின் விசாரணைக்கு பிறகு ஒப்படைப்பு


விக்கிரவாண்டி அருகே ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.3¾ கோடி பறிமுதல் வருமானவரித்துறையின் விசாரணைக்கு பிறகு ஒப்படைப்பு
x
தினத்தந்தி 25 March 2021 10:39 PM IST (Updated: 25 March 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.3¾ கோடி பறிமுதல் வருமானவரித்துறையின் விசாரணைக்கு பிறகு உாியவாிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் இளையராஜா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரசுராமன், ஏட்டுகள் முருகன், அமலூர் பவலூசியா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் விக்கிரவாண்டி அடுத்த காணை அருகே திருக்கோவிலூா்-விழுப்புரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

 அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 கோடியே 91 லட்சம் எடுத்து வந்தது தெரியவந்தது. வாகனத்தில் வந்தவர்கள், திருச்சியை தலைமையிடமாக கொண்ட ஒரு தனியார் வங்கிக்கு, தனியார் ஏஜென்சி மூலம் பணத்தை எடுத்து செல்வது தெரியவந்தது. 


மேலும் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் கிளைகளில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு விழுப்புரம் கிளையில் பணம் பெற செல்வதாக அந்த வேனில் வந்த ஏஜென்சியின் பிரதிநிதியான திருச்சியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 39) என்பவர் பறக்கும்படை அதிகாரியிடம் தெரிவித்தார். 

இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும்படையினர் பணத்துடன் அந்த மினிவேனை பறிமுதல் செய்து விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இருந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். 


இதுபற்றி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவுடைநம்பி, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அதிகாரிகள் விக்கிரவாண்டி தாலுகா அலுவலக்திற்கு விரைந்து வந்து, தனியார் ஏஜென்சியின் பிரதிநிதிகள் மற்றும் தனியார் வங்கியை சேர்ந்த அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர்.

 பின்னர் அவர்கள் வங்கியில்  இருந்து உரிய ஆவணங்களை எடுத்து வந்து வருமானவரித்துறை அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம்  சமர்ப்பித்தனர். இதையடுத்து அந்த பணம் தனியார் ஏஜென்சியிடம் திருப்பி  ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story