சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பார்வையாளர் சந்திரசேகர்வாலிம்பே ஆய்வு


சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பார்வையாளர் சந்திரசேகர்வாலிம்பே ஆய்வு
x
தினத்தந்தி 25 March 2021 11:02 PM IST (Updated: 25 March 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பார்வையாளர் சந்திரசேகர்வாலிம்பே ஆய்வு

சங்கராபுரம்

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்  சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை தேர்தல் பார்வையாளர் (பொது) சந்திரசேகர்வாலிம்பே நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அப்போது வாக்குச்சாவடிமையங்களில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் உள்ளதா? என்பதை பார்வையிட்டார். தொடர்ந்து வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை, மண்டல அலுவலர்களின் எண்ணிக்கையை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது தேர்தல் உதவி அலுவலர் சையத்காதர், அலுவலர்கள் ஷேக்அமீர், இனையதுல்லா, வருவாய் ஆய்வாளர் திருமால், கிராம நிர்வாக அலுவலர் நிமிலன் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து ஆலத்தூர், அரியபெருமானூர், மூரார்பாளையம், தியாகராஜபுரம், எஸ்.வி.பாளையம், ஊராங்காணி ஆகிய ஊர்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களையும் சந்திரசேகர் வாலிம்பே பார்வையிட்டார்.


Next Story