தமிழகத்தில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி பேட்டி
சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் என்று கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி கூறினார்.
கோவை,
சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் என்று கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி கூறினார்.
இது தொடர்பாக அவர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதாவால் பாதிப்பு இல்லை
கேரள மாநில தேர்தலில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கேரள தங்க கடத்தல் விவகாரம் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் இருக்கிறது.
கேரளாவில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பா.ஜனதா கட்சியால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கேரளாவில் பா.ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் ரகசிய உடன்பாடு வைத்து செயல்படுகின்றன.
அங்குள்ள ஒரு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் பேச்சு இதை உறுதிபடுத்தும் படியாக இருக்கிறது.
எதிர்த்து வருகிறது
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-காங்கிரஸ் ஒரு அணியில் உள்ளன. மேற்கு வங்காளத்தில் நிலைமை வேறு விதமாக உள்ளது.
எனவே அந்தந்த மாநிலங்களின் நிலைக்கேற்ப கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை கொண்டுள்ளன. எங்கள் எல்லோருடைய ஒரே நோக்கமும் பா.ஜனதா கட்சியை எதிர்ப்பது தான்.
காங்கிரஸ் கட்சி அனைத்து வகைகளிலும் பா.ஜனதாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 40 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது.
ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிடுகிறது. இது தான் அரசியல்.
அதிக இடங்களை கைப்பற்றும்
கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் குறைவான இடங்கள் கிடைத்தாலும் எங்கள் ஒரே நோக்கம் பா.ஜனதா கட்சியை எதிர்க்க வேண்டும் என்பது தான்.
இதற்காக குறைவான இடங்கள் கிடைத்தாலும் அது பற்றி கவலை இல்லை. அதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story