மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே உள்ள எம்.கோவில்பட்டியை சேர்ந்த வெள்ளிமலை மகன் ராதாகிருஷ்ணன் (வயது27). இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர் மோட்டார் சைக்கிளில் சிங்கம்புணரிக்கு வந்துவிட்டு எம்.கோவில்பட்டி நோக்கி சென்றபோது மருதிப்பட்டி அருகில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையின் ஓரத்தில் இருந்த ஆலமரத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ராதா கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எஸ்.வி. மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story