ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே தபால் வாக்களிக்க ஏற்பாடு


ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே தபால் வாக்களிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 26 March 2021 12:02 AM IST (Updated: 26 March 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே தபால் வாக்களிக்க ஏற்பாடு

ராணிப்பேட்டை

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 80 வயது கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய இருப்பிடத்திலேயே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 697 பேர் தபால் வாக்க ளிக்க ஏதுவாக இவர்களது வீட்டிற்கே வந்து தபால் வாக்குகளை பெறுவதற்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி உதவி அலுவலர், நுண் பார்வையாளர், வீடியோகிராபர், காவலர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அவர்கள் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல்  வாக்காளர்களின் இல்லத்திற்கு வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்ய உள்ளனர். எனவே தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த  வாக்காளர்கள் இல்லத்திலிருந்து வாக்களிக்கலாம். மேலும் இப்பணியை அந்தந்த தொகுதி வேட்பாளர்கள், முகவர்கள், அரசியல் கட்சியினர் உடனிருந்து பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். 

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.

----
Reporter : A. SUBARAJ  Location : Vellore - RANIPET DEPOT

Next Story