கோவையில் 153 பேருக்கு கொரோனா


கோவையில் 153 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 March 2021 12:04 AM IST (Updated: 26 March 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நாளுக்குநாள் தாக்கம் அதிகரித்து வருவதுடன் நேற்று 153 பேருக்கு கொரோனா உறுதியானது.

கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  புதியதாக 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.  

இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 718-ஆக உயர்ந்தது.  கொரோனா தொற்றினால் 98 பேர் குணமடைந்து உள்ளனர். 

இதனால், மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 93-ஆக உள்ளது. 

முக கவசம் அணிய வேண்டும்

மேலும், கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் 936 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 கொரோனா காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 689 ஆக உள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், "கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்  என்றனர்.

கோவை ஒண்டிப்புதூர், சூலூர் ஆகிய பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 2 ஆசிரியைக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது

Next Story