மகாதானபுரம் ரெயில் நிலைய பெயர் பலகையில் சமஸ்கிருத மொழி


மகாதானபுரம் ரெயில் நிலைய பெயர் பலகையில் சமஸ்கிருத மொழி
x
தினத்தந்தி 26 March 2021 12:06 AM IST (Updated: 26 March 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

மகாதானபுரம் ரெயில் நிலைய பெயர் பலகையில் சமஸ்கிருத மொழி இருந்தது. தமிழ் ஆர்வலர்கள் எதிர்பால் உடனடியாக மாற்றப்பட்டது.

கிருஷ்ணராயபுரம்
தமிழகம் முழுவதும் அனைத்து ஊர்களில் உள்ள ரெயில் நிலையங்களில் பெயர் பலகையில், தமிழ், ஆங்கிலம், இந்தி எழுதப்பட்டிருக்கும். இதுதான் பழங்காலமாகே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர், மகாதானபுரம் ஆகிய ரெயில்வே நிலையத்தில் புதிதாக ரெயில் நிலைய கட்டிடம், நடைமேடை, கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் நடைேமடையில் உள்ள பெயர் பலகையும் புதிதாக எழுதப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த மகாதானபுரம் ரெயில் நிலையத்தில் பழைய முறைப்படி இருந்த ஊர் பெயரை மஹாதானபுரம் என்று சமஸ்கிருதத்தில் எழுதி உள்ளனர். இதற்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பெயர் பலகையில் இருந்த 'ஹா' வை மட்டும் அழித்து விட்டு 'கா' போட்டு முன்பு இருந்த மாதிரியே மகாதானபுரம் என எழுதி மாற்றப்பட்டது.


Next Story