தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
தவிட்டுப் பாளையம் போலீஸ் செக்போஸ்ட் அருகே தீவிரமாக சோதனை செய்தனர்
நொய்யல்
தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கரூர் மாவட்டம் தவிட்டுப் பாளையம் போலீஸ் செக்போஸ்ட் அருகே உள்ள சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் லட்சுமி தலைமையிலான குழுவினர் சேலத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற கார்கள், வேன்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை தனித்தனியாக நிறுத்தி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்கின்றனரா? என்றும் தீவிரமாக சோதனை செய்தனர். இதனால் தவிட்டுப்பாளையம் போலீஸ் செக்போஸ்ட் முதல் காவிரி ஆற்றுப் பாலம் வரை நெடுகிலும் வாகனங்கள் வரிசையாக நின்றன.
Related Tags :
Next Story