வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 26 March 2021 12:25 AM IST (Updated: 26 March 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு நடைபெற்றது.

கரூர்
கணினிமுறை குலுக்கல் பணி
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் சந்தன் சயன் குஹா, கரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் வினய் பப்லானி, கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பொதுப்பார்வையாளர் நாராயண் சந்திர சர்க்கார், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் கணினிமுறை குலுக்கலில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி தொகுதி வாரியாக நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பாலசுப்பிரமணியன் (கரூர்), ஷேக்அப்துல்ரக்மான் (குளித்தலை), தவச்செல்வம் (அரவக்குறிச்சி), தட்சிணாமூர்த்தி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோர் கலந்துகொண்டனர். கரூர் மாவட்டத்தில் மொத்தம் 1,274 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதற்காக முதல்கட்ட கணினி மூலம் குலுக்கள் கடந்த 10-ந்தேதி நடைபெற்று தேர்வு செய்யப்பட்ட அலுவலர்களுக்கு கடந்த 13-ந்தேதி முதல்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்காக இரண்டாம் கட்ட கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட அலுவலர்களுக்கு நாளை (சனிக்கிழமை) இரண்டாம் கட்ட பயிற்சியும், வருகிற ஏப்ரல் மாதம் 5-ந்தேதி மூன்றாம் கட்ட பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
இரண்டாம் கட்ட பயிற்சி
அதன்படி, அரவக்குறிச்சி தொகுதிக்காக 310 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களும், கரூர் தொகுதிக்காக 355 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களும், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதிக்காக 297 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களும், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்காக 312 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கும் என மொத்தம் 1,274 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களும், 3,822 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் கூடுதலாக தேவைப்படும்போது பயன்படுத்தும் வகையில் 1,020 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு தயார்நிலையில் உள்ளனர். 
நாளை (சனிக்கிழமை) இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் அனைவருக்கும் நடைபெற உள்ளது. அதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் பணிபுரியும் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தடாகோவில் கொங்கு ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியிலும்,கரூர் தொகுதியில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு புலியூர் அரசு நிதியுதவி பெறும் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியிலும், குளித்தலை தொகுதியில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஸ்ரீகலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story