பஸ்சும், வேனும் உரசிக்கொண்டதால் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த வாலிபர் கையில் படுகாயம்
பஸ்சும், வேனும் பக்கவாட்டில் உரசிக்கொண்டதால் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த வாலிபர் கையில் படுகாயம் ஏற்பட்டது.
கிணத்துக்கடவு,
பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கியிருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் ராஜ்(வயது 19). இவர் சம்பவத்தன்று சொந்த வேலை காரணமாக கோவைக்கு சென்றுவிட்டு பொள்ளாச்சிக்கு பஸ்சில் புறப்பட்டார்.
அதில் கடைசி இருக்கைக்கு முன் இருக்கையில் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்தார். கோவில்பாளையம் கால்நடை ஆஸ்பத்திரி அருகில் முன்னால் சென்ற வேனை அந்த பஸ் முந்தி சென்றது. அப்போது பஸ்சும், வேனும் பக்கவாட்டில் உரசிக்கொண்டன. இதனால் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்த ராஜின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story