வாகன சோதனையில் ரூ.87 ஆயிரம் பறிமுதல்


வாகன சோதனையில் ரூ.87 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 26 March 2021 1:20 AM IST (Updated: 26 March 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே வாகன சோதனையில் ரூ.87 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

சாத்தூர்,

சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி வாகனத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியான ஆலங்குளம் சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலரான போத்திராஜ் தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
 அப்போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் ரூ.87 ஆயிரம்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 52) என்பதும் தெரிய வந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடமிருந்து ரூ.87 ஆயிரத்தை பறிமுதல் செய்து சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story