ரூ.4½ லட்சம் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்


ரூ.4½ லட்சம் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 March 2021 1:42 AM IST (Updated: 26 March 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

இலுப்பூர் அருகே தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அன்னவாசல்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி விராலிமலையில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் ராமு தலைமையில் புதுக்கோட்டை-மணப்பாறை சாலையில் இலுப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வாகன சோதனையில் அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுக்கோட்டையை சேர்ந்த சிவக்குமார் ஓட்டிவந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ.4½ லட்சம் மதிப்பிலான எல்.இ.டி டி.வி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன. ஆனால், அந்த பொருட்களை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தண்டாயுதபாணியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பொருட்கள் அனைத்தும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story