வல்லடிக்காரர் கோவில் விழாவில் மஞ்சு விரட்டு


வல்லடிக்காரர் கோவில் விழாவில் மஞ்சு விரட்டு
x
தினத்தந்தி 26 March 2021 1:54 AM IST (Updated: 26 March 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

வல்லடிக்காரர் கோவில் விழாவில் மஞ்சு விரட்டு

மேலூர்,மார்ச்
மேலூர் அருகே வெள்ளலூர்நாடு அம்பலக்காரன்பட்டியில் பிரசித்தி பெற்ற வல்லடிகாரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடைபெற்றது. திறந்த வெளியில் ஆங்காங்கே காளை மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.
அவ்வாறு அவிழ்த்து விடப்பட்ட 200-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. அதனை இளைஞர்களும், மாடுபிடி வீரர்களும் அடக்க முற்பட்டு உற்சாகமடைத்தனர். இதில் சுமார் 9 மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. பின்னர் அங்குள்ள மருத்துவ முகாமில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் திரண்டு மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.

Next Story