பெயிண்டரை அடித்துக்கொலை செய்த கொத்தனார் கைது
பெயிண்டரை அடித்துக்கொலை செய்த கொத்தனார் கைது செய்யப்பட்டார்
உசிலம்பட்டி,மார்ச்.
உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தைச் சேர்ந்தவர் வேல் என்பவரது மகன் மணிவேல் (வயது 55). பெயிண்டரான இவருக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு மணிவேல் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் மணிவேலுக்கும், அவர் வீட்டின் அருகில் வசிக்கும் கொத்தனாரான மொட்டை மணி (55) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மொட்டை மணி மரக்கட்டையை எடுத்து மணிவேல் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.
இது பலத்த காயமடைந்த மணிவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன் தலைமையிலான போலீசார் மொட்டை மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மணிவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
Related Tags :
Next Story