70 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது


70 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 March 2021 1:54 AM IST (Updated: 26 March 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

70 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

திருமங்கலம்,மார்ச்
திருமங்கலம் அருகே கரடிக்கல் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை மறித்து சோதனை செய்தனர்.
இதில் அந்த மோட்டார்சைக்கிள்களில் 2 மூடைகளில் 70 கிலோ கஞ்சாவை கடத்திக் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கஞ்சாவை கடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த அழகுபாண்டி (வயது 54), முத்துப்பாண்டி (31), சேதுபதி (24), ராஜபிரபு (30) ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் கஞ்சா மூடைகள் மற்றும் மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Next Story