கரி உற்பத்தி தொழிலாளி கொலை


கரி உற்பத்தி தொழிலாளி கொலை
x
தினத்தந்தி 26 March 2021 2:00 AM IST (Updated: 26 March 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே கரி உற்பத்தி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருமங்கலம்,மார்ச்
திருமங்கலம் அருகே கரி உற்பத்தி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளி
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள நெடுமதுரை கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 50). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், மாரிச்செல்வம் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். 
கிராமத்தின் அருகே உள்ள பெரியகூட கோவில் பகுதியில் பெரியசாமிக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் மரக்கரி உற்பத்தி செய்து வந்தார். இரவு நேரத்தில் தனது தோட்டத்தில் வலைவிரித்து முயல் வேட்டையில் ஈடுபடுவார். நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு வீட்டில் இருந்த பெரியசாமி திடீரென மாயமானார்.
இந்த நிலையில் நேற்று காலை தோட்டத்தின் அருகே உள்ள மற்றொரு தோட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் நிர்வாண நிலையில் ரத்த காயங்களுடன் பெரியசாமி பிணமாக கிடந்தார். இது தொடர்பாக கூடக்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோதினி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
திடுக்கிடும் தகவல்
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் வந்து நேரில் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் பெரியசாமியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெரியசாமியின் கழுத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கூர்மையான பொருளைக் கொண்டு குத்தப்பட்ட காயங்கள் காணப்பட்டன. இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
முயல் பிடிக்கும் பிரச்சினை?
பெரியசாமியின் தம்பி சின்னச்சாமி மகன் மொக்கச்சாமி (22), நெடுமதுரை தெற்கு தெருவைச் சேர்ந்த விஜயராஜ் (20) உள்ளிட்ட 4 பேர் முயல் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கும், பெரியசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மொக்கச்சாமி கட்டையால் பெரியசாமியை தாக்கியுள்ளார். இதற்கு உடந்தையாக அஜித், விஜயராஜ் ஆகியோர் இருந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் ஆணியால் பெரியசாமியின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.
மனைவி கைது
இதனை தொடர்ந்து பெரியசாமியின் வீட்டுக்கு சென்ற மொக்கச்சாமி உனது கணவரை கொலை செய்து விட்டோம் என சாந்தியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் கொலையை மறைத்துள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து மொக்கச்சாமி, விஜயராஜ் மற்றும் சாந்தி உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா எனவும் சாந்தியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story