மாணவியிடம் சில்மிஷம் செய்த கொத்தனாருக்கு 3 ஆண்டு சிறை


மாணவியிடம் சில்மிஷம் செய்த கொத்தனாருக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 26 March 2021 2:06 AM IST (Updated: 26 March 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

மாணவியிடம் சில்மிஷம் செய்த கொத்தனாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஜெயங்கொண்டம்:

மாணவியிடம் சில்மிஷம்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சுண்டிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 35). கொத்தனாரான இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற ஒரு 15 வயது மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகலா, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கு சம்பந்தமாக  கடந்த  11 மாதங்களுக்கு முன்பு முருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
3 ஆண்டு சிறை
மேலும் இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் நேற்று தீர்ப்பு கூறினார். இதில், மாணவியிடம் சில்மிஷம் செய்த முருகனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் சிறுமிக்கு நிவாரணத் தொகையாக அரசு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Next Story