பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை


பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 26 March 2021 2:15 AM IST (Updated: 26 March 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இன்று முதல்-அமைச்சர் பிரசாரம் செய்கிறார். அவரது பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. வேட்பாளர் மான்ராஜை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேரடியில் இன்று(வெள்ளிக்கிழமை) பிரசாரம் செய்கிறார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று ஆலோசனை நடத்தினார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய வரும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டார்கள். போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது, கூட்டத்தினரை கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


Next Story