குறிச்சி பகுதியில் அதிமுக ஆட்சி வந்தவுடன்3 மாத காலத்திற்குள் அனைத்துசாலைகளும் புதிய தார்சாலைகளாக மாற்றப்படும்- அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன் உறுதி
குறிச்சி பகுதியில் அதிமுக ஆட்சி வந்தவுடன்3 மாத காலத்திற்குள் அனைத்துசாலைகளும் புதிய தார்சாலைகளாக மாற்றப்படும் என்று அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன் உறுதி அளித்தார்.
கிணத்துக்கடவு ,
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் கிணத்துகடவு தொகுதி அதிமுக வேட்பாளராக தாமோதரன் போட்டியிடுவார் தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர் தாமோதரன் தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார் அதன்படி நேற்று கோவை மாநகராட்சிக்குட்பட்ட 97,94 ஆகிய வார்டு பகுதியில் வீதிவீதியாக நடந்துசென் இரட்டை இலைசின்னத்திற்க்கு ஓட்டு சேகரித்தார் பொதுமக்களிடம் பேசியதாவது:-
குறிச்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அதிமுக ஆட்சி வந்தவுடன்3 மாத காலத்திற்குள் அனைத்துசாலைகளும் புதிய தார்சாலைகளாக மாற்றப்படும். மேலும் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட புதியகுடிநீர் தொட்டிகளில் தண்ணீர் உடனடியாக ஏற்றி அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்படும்என்றார். பின்னர் பிள்ளையார்புரம் பகுதியில் உள்ளபள்ளிவாசளுக்குநேரடியாக சென்று அங்குள்ள பள்ளிவாசல் ஜமாத்நிர்வாகிகளிடம் இரட்டை இலை சின்னத்திற்க்கு ஆதரவுகேட்டார்.
அப்போது ஜமாத்நிர்வாகிகள் ஒருசில கோரிக்கைகளைமனுவாக எழுதி வேட்பாளர் செ.தாமோதரனிடம் கொடுத்தனர்.தேர்தல்முடிந்ததும் அனைத்துகோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்றிதரப்படும் என உறுதியளித்தார்.முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்டதுணைதலைவர் குபே.துரை வேட்பாளர் செ.தாமோதரனை சந்தித்து அதிமுகவில் இணைந்துகொண்டார் . தேர்தல்பிரச்சாரத்தின்போது கிணத்துக்கடவு தொகுதி எட்டிமடை. சண்முகம் எம்.எல்.ஏ ,குறிச்சி பகுதி கழக செயலாளர் பெருமாள் சாமி, குறிச்சிமணிமாறன் ,மதுக்கரை பேரூராட்சி கழகச் செயலாளர் சண்முகராஜா ,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் குறிச்சி மரியா, ஈச்சனாரி ஜெயக்குமார்,வட்டக் கழக செயலாளர்கள்கேபில்பிரபு ,பாலகிருஷ்ணன் ,உதயகுமார், மாநில சிறுபான்மை பிரிவு பொதுச்செயலாளர் ஜான்சன்சிங், சுந்தராபுரம் மண்டலதலைவர்சிவானந்தம், சிடிசி அண்ணாதொழில்சங்க போக்குவரத்துதொழிலாளர்சங்கசெயலாளர் சிடிசி சின்ராஜ்உட்பட கூட்டணிகட்சி நிர்வாகிகள் ஏராளமானோர்கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story