தேர்தல் பணி ஆசிரியர் நியமனத்தில் குளறுபடி நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு
தேர்தல் பணி ஆசிரியர் நியமனத்தில் குளறுபடி நடந்துள்ளதாக ஆசிரியர்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
திருச்சி,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் நீலகண்டன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் நேற்று மாலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கடின நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் தேர்தல் பணியில் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் மருத்துவ விடுப்பு எடுத்தவர்களையும் புற்றுநோய் போன்ற அதிதீவிர நோயினால் பாதிக்கப்பட்டவர்களையும் தேர்தல் பணி பட்டியலில் சேர்த்து இருக்கிறார்கள். இந்த குளறுபடிகளுக்கு எல்லாம் கல்வித்துறை அதிகாரிகள் தான் காரணம். உண்மையான காரணங்களுக்காக தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 17 ஏ விதிப்படி தண்டனை வழங்குவதை தவிர்த்து எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கப்படாத என உறுதியளித்தார்.இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதே போல அனைத்து ஆசிரியர் சங்கத்தின் சார்பிலும் வருவாய் துறையில் பணியாற்றும் அலுவலர்களின் ஆசிரிய உறவினர்களின் பெயர்கள் தேர்தல் பணி பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story