தபால் வாக்குகள் வழங்குவதற்கான பணிகள் தீவிரம்
தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்குவதற்காக வாக்குச்சீட்டு, படிவங்கள் தனித்தனி கவர்களில் பிரித்து அடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்குவதற்காக வாக்குச்சீட்டு, படிவங்கள் தனித்தனி கவர்களில் பிரித்து அடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
8 சட்டசபை தொகுதிகள்
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, திருவையாறு, பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 3 கட்டமாக பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
அதன்படி முதல் கட்ட பயிற்சி நடைபெற்ற போது தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் தபால் வாக்கு அளிப்பதற்கு வசதியாக. கடந்த வாரம் அவர்களின் விபரங்கள் கேட்டு பெறப்பட்டன. அதன்படி தபால் வாக்குகள் செலுத்தும் ஆசிரியர்கள் தங்கள் விருப்பங்களை தெரிவித்து கடிதம் அளித்தனர்.
தபால் வாக்குகள்
இதையடுத்து தபால் வாக்கு அளிக்கும் ஆசிரியர்களுக்கு, ஒரு கவரில் தபால் வாக்கு அளிக்கும் முறை, ஓட்டு சீட்டு, ஓப்புகை கடிதம் ஆகியவற்றை அனுப்புவதற்கான பணிகள் அந்தந்த சட்டசபை தொகுதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இதை போல தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தபால் வாக்கு அளிக்க உள்ள சுமார் 3,000 பேர் விண்ணப்பம் வழங்கியுள்ளதை, பிரித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பும் பணியை ஆர்.டி.ஓ., வேலுமணி பார்வையிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது; தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், இன்று (26ம் தேதி), தனியார் கல்லுாரியில் நடைபெறுகிறது. அங்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வாக்கு சீட்டை கொண்டு, பயிற்சியின் போது வாக்குகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன் மூலம் பயிற்சியில் கலந்துக்கொள்ளும் நபர்கள் வாக்கு அளிக்கலாம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story