கோவில் கும்பாபிஷேக விழா
பண்பொழி நகரீஸ்வரமுடையார் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
அச்சன்புதூர், மார்ச்:
பண்பொழியில் பிரசித்தி பெற்ற நகரீஸ்வரமுடையார்- அறம் வளர்த்த நாயகி கோவிலில் சுமார் 45 ஆண்டுகளுக்கு பின்பு திருப்பணி மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த 21-ந் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது. பக்தர்கள் ஓம் நமச்சிவாய கோஷமிட மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் பண்பொழி திருமலை கோவில் தக்கார் சங்கர், உதவி ஆணையர் அருணாசலம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story